Connect with us

Raj News Tamil

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் சகோதரி காலமானார்!

இந்தியா

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் சகோதரி காலமானார்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மூத்த சகோதரி ராஜூபென் மும்பையில் உள்ள மருத்துவமனையில் இன்று காலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ராஜூபென் வீட்டில் ஓய்வு எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது உடல் நிலை மோசமானதால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.

தனது மூத்த சகோதரி இறந்ததைத் தொடர்ந்து, அமித் ஷா தனது அனைத்து பொது நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

More in இந்தியா

To Top