இந்திய இசைத்துறை.. நலிவடைந்த கலைஞர்களை ஊக்குவிக்கும் அரசு..

இந்திய சினிமாத்துறையில் நலிவடைந்த கலைஞர்கள் வாழ்க்கை தரம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதனை மாற்ற வேண்டும் என்று, அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில், நேற்று கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், சினிமா விநியோகஸ்தர்கள் கலந்துக் கொண்ட இந்த கூட்டத்தில், இந்திய இசைத்துறையை முன்னேற்றம் அடைய வைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த துறையை எப்படி ஒன்றாக பயணிக்க வைப்பது, நலிவடைந்த கலைஞர்களை எப்படி ஊக்குவிப்பது? அவர்களின் வருமானத்தை உயர்த்துவது எப்படி? என்றும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், தகுதிவாய்ந்த கலைஞர்களுக்கு, எப்படி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது என்றும், விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே, தரமான படைப்புகளை உருவாக்குவதற்கு, சிறந்த வழியை கண்டறிய வேண்டும் என்று, திரைக்கலைஞர்களிடம் அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டார்.

மேலும், இதற்காக கமிட்டி உருவாக்கப்பட்டு, அந்த கமிட்டி 30 நாட்களுக்குள் அறிக்கை வெளியிடும். அந்த அறிக்கையில், ஒருவழிப் பாதையில், எப்படி பணியாற்றுவது என்பது குறித்தும், இந்த துறையை எப்படி உயர்த்துவது குறித்தும், கூறப்பட்டிருக்கும் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

பாடகரும், இசையமைப்பாளருமான அனுப் ஜலோட்டா தலைமை தாங்க உள்ள இந்த கமிட்டியில், எழுத்தாளர் ஜாவித் அக்தர் உட்பட பலர் அங்கம் வகிக்க உள்ளனர்.

RELATED ARTICLES

Recent News