சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் 74-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, அவரது ரசிகர்கள் பலரும், கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ரஜினிகாந்த் குறித்து பலரும் அறியாத 10 தகவல்களை தற்போது பார்க்கலாம்.
1. ரயில் மீது நடக்கும் சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த முதல் தென்னிந்திய நடிகர் ரஜினிகாந்த் தான்.
2. 70 MM என்ற மிகப்பெரிய திரையில் வெளியான முதல் திரைப்படம் ரஜினிகாந்த் நடித்த மாவீரன் தான்.
3. லண்டனில் உள்ள ‘Madame Tussauds’ என்ற மெழுகு சிலை அருங்காட்சியகத்தில், இடம்பெற்ற முதல் தென் ஆசிய நடிகர் ரஜினிகாந்த் தான்.
4. 2010-ல் உலக அளவில் IMDB ரேட்டிங் பெற்ற முதல் 50 படங்களின் பட்டியலில், தமிழில் ரஜினிகாந்தின் எந்திரன் திரைப்படம் மட்டுமே இடம்பெற்றது.
5. நடிகர் ரஜினிகாந்த் மட்டும் தான், பல்வேறு கேமரா தொழில்நுட்பங்களுடன் பணியாற்றி இருக்கிறார். அதாவது, ப்ளாக் அன்ட் வெயிட், கலர், 3டி, மோஷன் கேப்ஜர் ஆகிய பல்வேறு கேமரா தொழில்நுட்பங்களில் பணியாற்றிய முதல் இந்திய நடிகராக ரஜினி உள்ளார்.
6. இந்தியாவில் உள்ள நடிகர்களிலேயே, நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு மட்டும் தான், CBSE கல்வி முறையில் பாடமாக அமைந்துள்ளது. பேருந்து நடந்துநரில் இருந்து சூப்பர் ஸ்டார் வரை என்று அந்த பாடத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
7. ரஜினிகாந்தை பலரும் முன்மாதிரியாக வைத்துக் கொள்வது வழக்கம். ஆனால், ரஜினிகாந்தின் முன்மாதிரி யார் என்றால், அது அமிதாப் பச்சன் தான். அமிதாப் பச்சனின் 12-க்கும் மேற்பட்ட படங்களின் தமிழ் ரீமேக்கில், ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
8. சினிமாவில் நடிப்பதற்கு முன்பு, ரஜினிகாந்த் பேருந்து நடத்துனராக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், அதற்கு முன்பு, கூலித் தொழிலாளியாகவும், தச்சராகவும் அவர் பணியாற்றி உள்ளார்.
9. ரஜினிகாந்த் தற்போது உலகின் மிகப்பெரிய நடிகராக இருந்தாலும், பேருந்து நடத்துனராக அவர் பணியாற்றிய காலம், அவருக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. இதனை சிறப்பிக்கும் விதமாக, பெங்களூரில் ஒவ்வொரு புதிய பஸ் ரூட்டின் முதல் டிக்கெட்டும், ரஜினிகாந்திடம் வழங்கப்படும். இது மரியாதையின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.
10. சிகரெட்டை தூக்கி போட்டு, அதனை வாயில் பிடிக்கும் ரஜினியின் ஸ்டைல், மிகவும் பிரபலமான ஒன்று. இந்த ஸ்டைலை வைத்து தான், அவர் சினிமாவில் வாய்ப்பு பெற்றதாகவும் கூறப்படுகிறது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால், பலருக்கும் தெரியாத விஷயம் என்னவென்றால், தனது 18 வயதுக்கு முன்னரே தான், இப்படியான ஸ்டைலை ரஜினி கற்றுக் கொண்டாராம். அதாவது, தன்னைவிட வயதில் மூத்தவர்களின் கேங்கில் சேருவதற்காக, அவ்வாறு சிகரெட்டை பிடிக்க முடியும் என்று அவர்களிடம் பந்தயம் வைத்தாராம். மேலும், பள்ளியில் இருந்த புதரில் தான், முதன்முறையாக அதனை செய்துக் காட்டினாராம்.