ரஜினி பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்த், இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். பல்வேறு திரை பிரபலங்கள், அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், இவரை பற்றி பலருக்கும் தெரியாத தகவல்களை தற்போது பார்க்கலாம்..

1. ரஜினி நடத்துநராக பணியாற்றினார் என்பது மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால், கூலி வேலையும், தச்சு வேலையும் கூட, அவர் செய்திருக்கிறாராம்.

2. இந்திய நடிகர்களிலேயே, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இடம்பெற்ற ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான். அதாவது, பேருந்து நடத்துநர் முதல் சூப்பர் ஸ்டார் வரை என்று ஒரு தனிப்பாடமே அவரைப் பற்றி உள்ளதாம்.

3. ரஜினிகாந்த் கர்நாடகாவில் பிறந்ததால், அவர் ஒரு கன்னடர் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால், பிறப்பின் அடிப்படையில் அவர் ஒரு மராத்தியர் தானாம்.