வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது.
சென்னை விமான நிலையம் தற்காலிகமாக இன்று இரவு 11 மணி வரை (திங்கள்கிழமை) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய ஒடுபாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால், விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.