உயிருக்கு போராடிய முதியவர் – காப்பாற்றாமல் வீடியோ எடுத்த போலீஸ்!

உத்திரபிரதேசம் மாநிலம் ,ஹமீர்பூர் கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவர்,தண்ணீர் எடுப்பதற்காக அருகில் உள்ள ஆற்றில் இறங்கியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த புதக்குழியில் சிக்கி எழுந்திருக்க முடியாமல் தவித்துள்ளார். பின்னர் சேற்றில் சிக்கிய முதியவரை கிராம மக்கள் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரில் ஒருவர்,முதியவரை காப்பாற்றாமல் வீடியோ எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் அங்கு இருந்தும், கிராம பொதுமக்களின் முயற்சியில் பத்திரமாக காப்பாற்றப்பட்டார்.