மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வரும் பெண், திருமணம் செய்துக் கொள்வதற்காக, டேட்டிங் ஆப் ஒன்றில், கணக்கு தொடங்கினார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தின்போது, ராஜேஷ்குமார் என்ற நபர் அறிமுகமாகி பேசி வந்துள்ளார்.
மேலும், வருமான வரித்துறையிலும், Raw ஏஜெண்டாகவும் பணியாற்றி வருகிறேன் என்றும் அந்த நபர் கூறியுள்ளார். இதனை நம்பி, அந்த பெண்ணும் அவருடன் தொடர்ந்து பேசி வந்தார். இவ்வாறு தொடர்ந்து பேசி வந்த அந்த நபர், NGO ஒன்றிற்கு பணம் தேவை என்று அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு இரக்கப்பட்ட அந்த பெண்ணும், தன்னிடம் இருந்த 11 லட்சம் ரூபாயை, அவரிடம் கொடுத்துள்ளார். ஆனால், அதன்பிறகே, அந்த நபர் சொன்ன அனைத்தும் பொய் என்றும், அவர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்றும், அந்த பெண்ணுக்கு தெரியவந்தது.
இதையடுத்து, அவர் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில், அவர் தனது சொந்த ஊரில் பதுங்கியிருப்பதை கண்டறிந்த காவல்துறையினர், அங்கு சென்று அவரை கைது செய்தனர்.