இந்தியா
பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த தாத்தா.. ரூ.10 கொடுத்து சமாதானம் செய்ய முயற்சி..
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்த பெண், தனது 15 வயதை அழைத்துக் கொண்டு, ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த அந்த பெண்ணின் மாமனார், விறகு வெட்டுவதற்கு கோடாறி தேவை என்றும், அதனை வீட்டில் இருந்து கொண்டு வா என்றும், மருமகளிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, அவர் கோடாறி எடுக்க சென்றபோது, தனது 15 வயது பேத்தியை, அந்த முதியவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இந்த விஷயம் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என்று கூறிய அவர், சிறுமியிடம் 10 ரூபாயை கொடுத்துள்ளார்.
இந்த சம்பவங்கள் அனைத்தையும், அப்பகுதியை சேர்ந்த நபர் பார்த்துவிட்டு, முதியவரை கடுமையாக அடித்துள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினரும், அந்த முதியவரை அடித்த, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். தகவல் அறிந்து காவல்நிலையத்திற்கு வந்த சிறுமியின் பெற்றோர், புகார் அளித்தனர். அதன்பேரில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
