உத்தரபிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தில் உள்ள மபுத்நகர் பகுதியை சேர்ந்தவர் சகிர். இவருக்கு குட்டோ என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை அன்று, அசைவம் சமைப்பது தொடர்பாக, கணவன்-மனைவி இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
“கறியை சமைக்க மாட்டேன்” என்று மனைவி கூறியதால் ஆத்திரம் அடைந்த கணவன், கூரிய ஆயுதங்களை பயன்படுத்தி, குட்டோவின் கழுத்தை அறுத்துள்ளார்.
குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், சகிரை பிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே, அதிகப்படியான ரத்தம் வெளியேறி, குட்டோ பரிதாபமாக உயிரிழந்தார். அசைவம் சமைப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், மனைவி உயிரிழந்துள்ள சம்பவம், பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.