மது அருந்திய ஆசிரியர்..! வகுப்பறையில் நடந்தேறிய அவலம்..!

அண்மைக் காலங்களில் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மது அருந்துவது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் ஹத்ரஸ் அருகே அரசு ஆரம்ப பள்ளி ஒன்றுசெயல்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் மாணவர்கள் கண்முன்னே மது அருந்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் மாணவர்கள் தரையில் அமர்ந்துள்ளனர்,அவர்களை சற்றும் மதிக்காத அவர் ஸ்டூலுக்கு அடியில் ஒரு மது பாட்டீலையும்,அமர்ந்திருக்கும் நாற்காலி பின்னே ஒரு மது பாட்டீலையும் மறைத்து வைத்துள்ளார்.

மேலும் போதையிலே மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார். இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்ததை தொடர்ந்து, அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.