ஆன்லைனில் ரிஸ்ட்வாட்ச் ஆர்டர்..! பார்சலில் காத்திருந்த அதிர்ச்சி..!

உத்தர பிரதேச மாநிலம் கெளசம்பி மாவட்டத்தை சேர்ந்தவர் நீலம் யாதவ். இவர் ஃபிளிப்கார்ட்டில் ரூபாய் 1,034 மதிப்புள்ள ரிஸ்ட் வாட்ச் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

இதையடுத்து, 9-நாள் கழித்து அந்த பார்சல் டெலிவரி செய்யப்பட்டது. பார்சலை ஆர்வத்தோடு பிரித்து பார்த்த நீலம் யாதவிற்கு, அதில் வாட்சிக்கு பதிலாக, மாட்டு சாணத்தால் ஆன வறட்டிகள் இருந்துள்ளது.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், பார்சலை ரிட்டன் செய்து பணத்தை மீண்டும் பெற்றுள்ளார்.

சமீபகாலமாக ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு பதிலாக, வேறொரு பொருளை அனுப்பி வைக்கும் சம்பவங்கள், ஆன்லைன் விற்பனை தளங்களில் நடைபெற்று வருகிறது.