மணமகனுக்கு திடீரென வந்த வலிப்பு.. மணமகள் எடுத்த அதிரடி முடிவு.. கதிகலங்கிய குடும்பம்..

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி அருகே பிரேம்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கும், ஆர்த்தி என்ற பெண்ணுக்கும், கடந்த 11-ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து, மனப்பெண்ணை புகுந்த வீட்டிற்கு அழைத்து செல்லும் நிகழ்வு, மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் நடத்தப்பட்டது. அப்போது, காரில் அமர்ந்திருந்த மணமகனுக்கு, திடீரென வலிப்பு ஏற்பட்டு, கீழே விழுந்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆர்த்தி, வலிப்பு நோய் உள்ள இவருடன் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி, அவருடன் செல்ல மறுத்துவிட்டார்.

இதனால், மொத்த குடும்பமும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியது. இதுகுறித்து இருதரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News