Connect with us

RajNewsTamil

தலைகீழாக உடற்பயிற்சி.. தலையின் மீது விழுந்த Slab.. மாணவனுக்கு நேர்ந்த கொடுமை!

இந்தியா

தலைகீழாக உடற்பயிற்சி.. தலையின் மீது விழுந்த Slab.. மாணவனுக்கு நேர்ந்த கொடுமை!

உத்தரபிரதேச மாநிலம் பந்த்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் சிவம். 21 வயதான இவர், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வதில், அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று பள்ளி ஒன்றின் slab மீது ஏறிய ஷிவம், தலைகீழாக தொங்கிக் கொண்டு, உடற்பயிற்சி செய்வது போல், ரீல்ஸ் செய்ய முயன்றுள்ளார்.

ஆனால், அந்த சமயத்தில் அந்த Slab அவர் மீது விழுந்து, பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாணவனின் உறவினர்கள், முதலில் இந்த தகவலை நம்ப மறுத்துள்ளனர்.

ஆனால், அவர்கள் அங்கு வந்து நடந்த சம்பவம் உண்மை என்று தெரிந்ததும், கதறி அழுதுள்ளனர். ரீல்ஸ் மீதான மோகம், மாணவனின் உயிரையே பறித்துள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in இந்தியா

To Top