நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. சிறு கடைகள், தள்ளுவண்டி வியாபாரிகள் என பல தரப்பினரும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மாறிவிட்டனர்.
இந்நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பதற்கு தேசிய பரிவர்த்தனை கழகம் திட்டமிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
உங்கள் மொபைல் வாலட் வழியாக வியாபாரிகளுக்கு 2000 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தும்போது அதற்கு 1.1% கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த கட்டண முறை மொபைல் வாலட்டில் இருந்து பணம் அனுப்பும்போது மட்டுமே வசூலிக்கப்படும்.மற்றபடி உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணம் அனுப்பும்போது வசூலிக்கப்படாது.