மத்திய அரசு பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகள் மற்றும் குரூப் ’ஏ’ மற்றும் குரூப் ’பி’ பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுகள் கடந்த ஆண்டு நடைபெற்றது.
இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய இறுதி முடிவுகள் இன்று (ஏப்.16) வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, மொத்த 1,016 பேர் மத்திய அரசு குடிமைப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் ஆதித்யா ஸ்ரீவத்ஸாவா அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை அனிமேஷ் பிரதானும் மூன்றாவது இடத்தை டோனூரு அனன்யா ரெட்டியும் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் பொது பிரிவில் 474 பேரும், இ.டபிள்யு.எஸ். பிரிவில் 115 பேரும், ஓபிசி பிரிவில் 303 பேரும், எஸ்.சி., பிரிவில் 165 பேரும், எஸ்.டி., பிரிவில் 86 பேரும் என, மொத்தம் 1,016 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.