UPSC தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று, பல்வேறு நபர்கள், இரவும், பகலும் கண் விழித்து, ஒரு ஆண்டு கடினமாக உழைத்து படிப்பது வழக்கம். அவ்வாறு படிக்கும் நபர்கள், தேர்வுக்கு தாமதமாக வந்ததாக கூறி, திரும்பி அனுப்பப்பட்டால், அவர்களது ஒரு வருட உழைப்பு வீணாக போய்விடும்.
ஆனால், அப்படியான ஒரு சம்பவம் நடந்து, அது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது, இந்தியாவின் மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றான UPSC தேர்வின் முதல் நிலையான PRELIMS-ஐ எழுத, தனது தாய் மற்றும் தந்தையுடன் சென்றுள்ளார்.
அப்போது, அந்த பெண் தாமதமாக வந்ததாக கூறி, தேர்வு மையத்தில் இருந்தவர்கள் அவரை தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தாய், சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்துள்ளார்.
மேலும், மகள் தேர்வு எழுத முடியாத விரக்தியில் கடுமையாக அழுது புலம்பினார். இருப்பினும், மனம் தளராக அந்த பெண், இது பெரிய விஷயமே அல்ல, நான் அடுத்த முறை மீண்டும் தேர்வு எழுதிக் கொள்கிறேன் என்று கூறினார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, பலரையும் சோகம் அடைய வைத்துள்ளது. ஒருசிலர், அந்த பெண்ணின் வலிமையான மனதை, பாராட்டி வருகின்றனர்.