இந்தியில் ஒளிபரப்பான பிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர் நடிகை உர்பி ஜாவத். அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஒரே வாரத்தில் வெளியேற்றப்பட்டிருந்தாலும், தனது வித்தியாசமான ஆடையின் மூலம், ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.
இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னுடைய கடந்த காலங்களில் நடந்த கசப்பான அனுபவங்கள் குறித்து பகிர்ந்துக் கொண்டார்.
அவர் பேட்டியில் பேசியது பின்வருமாறு:-
“எனக்கு 15 வயது இருக்கும்போது, என்னுடைய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் இருந்து எடுத்த நபர், அதனை ஆபாச வலைதளங்களில் பதிவிட்டுவிட்டார். இதனை எனது உறவினர்கள் மூலம் அறிந்த என் தந்தை, என்னை அடித்து கொடுமைப்படுத்தினார்.
இதுமட்டுமின்றி, ஆபாச நடிகைகள் அதிகம் சம்பளம் வாங்குவார்களாமே, உன்னுடைய சம்பளம் என்ன? என்று கேட்டு என்னை அவமானப்படுத்துவார். இப்படியே தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கொடுமை செய்து வந்தார். இதனால், தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.
ஆனால், அந்த முடிவும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, எனக்கு 17 வயதாகும்போது, வீட்டைவிட்டு வெளியேறி, சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வந்தேன். அந்த சமயத்தில் தான், பிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அவர் அணியும் ஆபாசமான ஆடைகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த உர்பி ஜாவத், “இணையத்தில் உள்ள முகம் தெரியாதவர்களுக்கான நான் கவலை கொள்ள தேவையில்லை. எனக்கு இவ்வாறு உடை அணிவது பிடித்துள்ளது. அதனால் செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.