உலகின் சக்திவாய்ந்த பதவிகளின் ஒன்றாக அமெரிக்காவின் அதிபர் பதவி பார்க்கப்படுகிறது. இந்த பதவிக்கான தேர்தல் நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது.
இந்த தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹரிஸ்-ம், குடியரசு கட்சி சார்பில் டெனால்ட் ட்ரம்பும் போட்டியிட்டனர். இந்நிலையில், இந்திய நேரப்படி, இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
270 எலக்டோரல் வாக்குகள் பெற்றால் வெற்றி பெற முடியும் என்ற நிலையில், தற்போது முன்னிலை நிலவரம் என்னவென்பது தெரியவந்துள்ளது. அதன்படி, 214 எலக்டோரல் வாக்குகளை டெனால்ட் டிரம்பும், 179 எலக்டோரல் வாக்குகளை கமலா ஹாரிஸ்-ம் பெற்றுள்ளனர்.
மற்ற மாகாணங்களின் வாக்குகளை எண்ணிய பிறகு, இந்த முன்னிலை நிலவரங்கள் மாறலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், தற்போது உள்ள தகவல்கள் அடிப்படையில், பார்க்கும்போது, டெனால்ட் டிரம்ப் அதிபர் ஆவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.