அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பில் தலைவர் கலீத் மெஷால் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று இந்த போரை அமெரிக்கா முன்னெடுத்து செல்கிறது. அமெரிக்கா, இஸ்ரேலை ஆதரித்து ஆயுதங்களை வழங்கி வருகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் ஹமாஸ் மற்றும் காசா பகுதியை நசுக்க விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளார்.