மாணவர்கள் படிக்கும்போது, மிகவும் ஒழுக்கம் உடையவர்களாக மாற்றுவதற்கு, சில விதிமுறைகள் விதிக்கப்படுவது வழக்கம். பட்டமளிப்பு விழாவில், அந்த விதிமுறைகளை மாணவர்கள் பின்பற்றுவது கிடையாது.
ஆனால், பட்டமளிப்பு விழாவில், விதிமுறையை மீறியதற்காக, இளம்பெண் ஒருவருக்கு பட்டம் வழங்க, பள்ளி முதல்வர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதாவது, அமெரிக்காவில் உள்ள பிலேடெல்பியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கடந்த ஜூன் 9-ஆம் தேதி அன்று, பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இதில், கலந்துக் கொண்ட மாணவர்களுக்கு, பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டது. ஆர்பரிப்பு இருக்க கூடாது, ஒழுக்கமாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனால், அந்த விழாவில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும், மிகவும் அமைதியாக இருந்தனர்.
இந்நிலையில், பட்டம் வழங்கும் மேடையில், ஹஃப்ஸா அப்துல் ரஹ்மான் என்ற மாணவியின் பெயர் அறிவிக்கப்பட்டது. அப்போது, பட்டத்தை வாங்க அங்கு வந்த மாணவி, உணர்ச்சி பெருக்கால், தன் பெற்றோர்களுக்கு முத்தம் கொடுத்து, லேசான உடல் அசைவை வெளிப்படுத்தினார்.
இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த பள்ளி முதல்வர், அந்த மாணவிக்கு வழங்க இருந்த பட்டப்படிப்பை வழங்காமல், அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டார். மாணவிக்கான டிப்ளமோ சான்றிதழ் வழங்க பள்ளி முதல்வர் மறுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.