வாரனம் ஆயிரம் திரைப்படத்தில், தனது காதலியை தேடி, சூர்யா அமெரிக்காவிற்கு கிளம்புவார். இதேபோன்ற ஒரு சம்பவம், தற்போது உண்மையிலேயே நடந்துள்ளது.
ஆனால், இதில் என்ன சுவாரசியம் என்றால், அமெரிக்காவில் உள்ள பெண், இந்தியாவில் உள்ள இளைஞரை தேடி வந்துள்ளார். அதாவது, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் ஜாக்குலின் ஃபெரேரோ.
கண்டென்ட் கிரியேட்டராகவும், புகைப்படக் கலைஞராகவும் பணியாற்றி வரும் இவர், தான் வசித்து வரும் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில், வாழ்வாதாரத்தை இழந்துள்ளார். மேலும், கருத்து வேறுபாடு காரணமாக, தனது கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இதனால், தனிமையில் தவித்து வந்த ஜாக்குலினிடம், ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள குக்கிராமத்தை சேர்ந்த இளைஞர் இன்ஸ்டாகிராமில் பேசி வந்துள்ளார். “Hi” என்ற ஒற்றை மெசேஜ் உடன் துவங்கிய இவர்களது பழக்கம், 8 மாதங்களுக்குள் காதலாக மாறி, தற்போது திருமணம் வரை சென்றுள்ளது.
அதாவது, ஜாக்குலின் 14 ஆயிரத்து 800 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து, அமெரிக்காவில் இருந்து ஆந்திராவுக்கு வந்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து திருமணம் செய்துக் கொண்டு, அமெரிக்காவில் செட்டில் ஆகவும் உள்ளார்களாம். இந்த தம்பதியின் காதலை பார்த்த நெட்டிசன்கள் பலரும், வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.