ஈரானுக்கு எதிராக, தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவு செய்தால், அதில் அமெரிக்கா இணையாது என்று அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் பகுதியில் உள்ள ஈரான் நாட்டின் தூதரகத்தின் மீது, கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று, தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டை சேர்ந்த வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு, இஸ்ரேல் ராணுவம் தான் காரணம் என்று சந்தேகம் அடைந்த ஈரான், தற்போது இஸ்ரேலில் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், 3-ஆம் உலகப் போர் ஏற்படுமோ என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ABC என்ற செய்தி நிறுவனத்தின் திஸ் வீக் என்ற நிகழ்ச்சியில், வெள்ளை மாளிகையின், தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கலந்துக் கொண்டார்.
அப்போது பேசிய அவர், இஸ்ரேல் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு, US தொடர்ச்சியாக உதவி செய்யும். ஆனால், போர் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம், 3-ஆம் உலகப் போர் ஏற்படுவதற்கான அபாயம் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, தங்களது தாக்குதல் குறித்து பேசியுள்ள ஈரான், “இஸ்ரேலின் குற்றத்திற்கு தண்டனை கொடுப்பதற்காகவே, தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், தற்போது இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை முடிந்துவிட்டதாக கருதப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளது.