Connect with us
Raj News Tamil

Raj News Tamil

டி-20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

விளையாட்டு

டி-20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் ஜூன் 1 முதல் 29 வரை நடைபெறுகிறது.

இத்தொடரின் தூதராக தடகள மன்னன், ஜமைக்காவின் உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

உசைன் போல்ட் ஓலிம்பிக் போட்டியில் பங்கேற்று 8 முறை தடகள போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து உசைன் போல்ட் பேசியதாவது:

இதுகுறித்து உசைன் போல் பேசியதாவது:
“ஐசிசி டி20 உலகக் கோப்பையின் தூதராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிரிக்கெட் வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்கு கரீபியன் மண்ணில் இருந்து வந்தவன் என்பதால், கிரிக்கெட்டுக்கு என் இதயத்தில் எப்போதும் சிறப்பிடம் உண்டு.

உலக அளவில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இதுபோன்ற மதிப்புமிக்க போட்டியின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top