எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு, அரசியலில் ஆர்வம் இருந்து வந்துள்ளது. ஆனால், நடிகர் அஜித் மட்டும், மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்தபோதிலும், அரசியலில் நுழையாமலே இருந்து வருகிறார்.
இவ்வாறு இருக்க, நடிகர் அஜித்தை, தன்னுடைய அரசியல் வாரிசாக மாற்றுவதற்கு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முயற்சி செய்தார் என்று தகவல் கசிந்துள்ளது.
அதாவது, பிரபல பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், அஜித்தை அரசியலில் வரவழைக்க வேண்டும் என்று ஜெயலலிதா முயன்றார். ஆனால், அது கடைசி வரை நடக்காமலே போய்விட்டது என்று அவர் கூறியுள்ளார்.