“அவன் No சொல்லிட்டான்” – தற்கொலை செய்துக் கொண்ட பிரபல நடிகை!

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் துணை நடிகை தீபா. நீண்ட நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த இவர், வாய்தா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று மதியம் முதல், தீபாவின் செல்போனிற்கு, உறவினர்கள் செல்போனில் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால், யாருடைய அழைப்பையும் அவர் எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதன்காரணமாக, நண்பர் பிரபாகரன் என்பவர், தீபாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது கண்டு, பெரும் அதிர்ச்சி அடைந்தார்.  

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீபாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், காதல் தோல்வி காரணமாக, அவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.