கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைபடம் வாரணம் ஆயிரம். இப்படத்தில் சூர்யா, சிம்ரன், சமீரா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.

இப்படம் தெலுங்கில் மீண்டும் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் வரும் ஜூலை 21ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழில் வெளியாகுமா என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.