Connect with us

Raj News Tamil

வசூல் செய்ய முடியாமல் திணறும் வாத்தி திரைப்படம்..!

சினிமா

வசூல் செய்ய முடியாமல் திணறும் வாத்தி திரைப்படம்..!

தெலுங்கு இயக்குநர்கள் சமீப காலமாக விஜய், தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களை இயக்கி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மற்றும் சமுத்திரகனி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் வாத்தி.

வாத்தி படத்தில் தெலுங்கு வாடை அதிகம் வீசுவதாக கடும் விமர்சனங்கள் கிளம்பின. ஆனால், விமர்சனங்களை கடந்து முதல் வாரத்தில் வாத்தி திரைப்படம் திரையரங்குகளில் சிறப்பாகவே ஓடியது.

வாத்தி திரைப்படம் முதல் 3 நாட்களிலேயே உலகளவில் 51 கோடி வசூலை கடந்து விட்டதாகவும் இதுவரை 65 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனுஷ் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்தது. ஆனால், வாத்தி படம் அந்த அளவுக்கு வசூல் ஈட்டுமா? என்பது கேள்விக் குறியாக உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top