அரசு பங்களாவை காலி செய்கிறேன் – ராகுல் காந்தி அறிவிப்பு

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. மேலும் அவருடைய எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து டெல்லியில் உள்ள அரசு பங்களாவை வருகின்ற ஏப்ரல் மாதம் 22-ந்தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என மக்களவை செயலகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த உத்தரவை தொடர்ந்து அரசு பங்களாவை காலி செய்கிறேன் என ராகுல் காந்தி அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் மக்களவை செயலாளருக்கு இன்று அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- மக்களவை உறுப்பினர் என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு பங்களாவை நான் காலி செய்கிறேன். 4 முறை நான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொது மக்களுக்கு சேவையாற்றி உள்ளேன்.

20 ஆண்டுகளாக அரசு பங்களாவில் இருந்த என்னுடைய மகிழ்ச்சியான தருணத்தை என்னால் என்றுமே மறக்க முடியாது. விதிமுறைகளுக்கு உட்பட்டு நான் நடக்கிறேன். இவ்வாறு ராகுல்காந்தி கூறி உள்ளார்.