வாடிவாசல் படத்தில் இருந்து சூர்யா விலகலா? ரசிகர்கள் சோகம்!

பாலா இயக்கத்தில், சூர்யா நடிப்பில், சமீபத்தில் தொடங்கப்பட்ட வணங்கான் என்ற திரைப்படம், தற்போது கைவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில், சூர்யா நடித்து வருகிறார்.

இந்நிலையில், வாடிவாசல் படத்தில் இருந்தும், சூர்யா விலகியுள்ளதாக, தகவல் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. வாடிவாசல் படத்தின் அறிவிப்பு வெளியாகி 2 வருடங்கள் ஆன நிலையில், வெறும் டெஸ்ட் ஷீட் மட்டுமே நடத்தப்பட்டுள்ளதால், இந்த டிராப் ஆவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

ஆனால், இதுகுறித்து படக்குழுவினரிடம் விசாரித்தபோது, வாடிவாசல் டிராப் ஆகவில்லை என்றும், இந்த திரைப்படம் விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறி வருகின்றனர். இதேபோல் தான், ஆரம்பத்தில் டிராப் ஆகாது என்று கூறி வந்த வணங்கான் திரைப்படமும், தற்போது டிராப் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.