தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் வடிவேலு. ஆனால், இவர் நடிப்பில் தற்போது ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதில்லை.
இந்நிலையில், நடிகர் வடிவேலு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம், விஜய் அரசியலுக்கு சென்றது குறித்தும், அஜித்திற்கு நடந்த கார் விபத்து குறித்தும், கேள்விகள் கேட்கப்பட்டது.
இந்த இரண்டு கேள்விகளுக்கும், “வேறு ஏதாவது பேசுவோமா” என்று, ஒரே பதிலையே வடிவேலு தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.