“அந்த நாய் தான் காரணம்” – வம்பிழுக்கும் வடிவேலு!

பல்வேறு அரசியல் பிரச்சனைகளின் காரணமாக, நடிகர் வடிவேலு, சினிமாவில் நடிக்க முடியாமல் தவித்து வந்தார். தற்போது, அனைத்தும் சரியாகியுள்ளதால், மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் நடித்து வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கில் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் வரும் வரிகள் அனைத்தும், வடிவேலுவின் நிஜ வாழ்க்கையை பிரதிபலிப்பதாக உள்ளது என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

“நான் உண்டு வேலை உண்டு-னு இருந்தேன்.. அந்த Dogs-ஆல என் வேலைய இழந்தேன்” -என்று அந்த பாடலில் வரி ஒன்று இருக்கிறது. தன்னை நடிக்க விடாமல், பிரச்சனை பண்ணிய அனைவரையும், அவர் விமர்சிக்கும் படி, இந்த பாடல் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.