வடிவேலுவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

சமீபகாலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த வடிவேலுவிற்கு, தற்போது க்ரீன் சிக்னல் கிடைத்துவிட்டது. தற்போது, பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் இவர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில், ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

இந்த படம் வரும் 9-ஆம் தேதி அன்று வெளியாக உள்ள நிலையில், தற்போது அந்த படத்தின் டிரைலர் வெளியானது. மிகுந்த ஆர்வத்துடன் டிரைலரை பார்க்க வந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

அந்த டிரைலரின் ஒரு இடத்தில் கூட, சிரிப்பே வரவில்லை என்று ரசிகர்கள் பலரும், கமெண்டில் கூறி வந்தனர். இந்த படத்தை பார்ப்பதற்கு பதிலாக, வடிவேலுவின் பழைய காமெடி காட்சிகளையே பார்த்துவிடலாம் என்று கூறி வருகின்றனர்.