மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் மாமன்னன். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

குறிப்பாக வடிவேலு மற்றும் பஹத் பாசில் நடிப்பை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் மாமன்னன் படத்தில் நடிக்க வடிவேலு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு, ரூ. 2 முதல் ரூ. 3 கோடி வரை வடிவேலு சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.