Connect with us

Raj News Tamil

நடிகர் வெங்கல் ராவுக்கு உதவி செய்த வடிவேலு..!! எவ்வளவு கொடுத்திருக்கிறார் பாருங்க

சினிமா

நடிகர் வெங்கல் ராவுக்கு உதவி செய்த வடிவேலு..!! எவ்வளவு கொடுத்திருக்கிறார் பாருங்க

நடிகர் வடிவேலுடன் ஏராளமான காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமானவர் நடிகர் வெங்கல் ராவ். தற்போது வெங்கல் ராவ் உடல்நலம் குன்றி சிகிச்சையில் இருக்கிறார். அவரது கை மற்றும் கால் செயலிழந்து சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து நடிகர் சிம்பு இரண்டு லட்சம் ருபாய், KPY பாலா 1 லட்சம் ருபாய், ஐஸ்வர்யா ராஜேஷ் 25 ஆயிரம் என உதவி செய்திருந்தனர். இந்நிலையில் நடிகர் வடிவேலு ஒரு லட்சம் ரூபாயை வெங்கல் ராவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

வடிவேலு தன்னுடன் நடித்த நடிகர்கள் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்ய மாட்டார் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வடிவேலு தற்போது வெங்கல் ராவுக்கு உதவி செய்திருக்கிறார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top