கார் விபத்தில் பிரபல டிவி நடிகை மரணம்..! ரசிகர்கள் சோகம்

இந்தியில் சாராபாய் Vs சாராபாய் என்ற சின்னத்திரை தொடர் மூலம் பிரபலமானவர் வைபவி உபத்யா. மேலும் இவர் தீபிகா படுகோனுடன் இணைந்து ‘சப்பக்’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இவர் தனது வருங்கால கணவருடன் கடந்த திங்கள் கிழமை இமாச்சல பிரதேசத்தில் உள்ள குலு மணாலிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இவர்களுடைய கார் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் நடிகை வைபவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய வருங்கால கணவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.