“பரவசமாக இருக்கு” – மலையாள நடிகை குறித்து கவிஞர் வைரமுத்து!

“களரி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன். தொடர்ந்து மலையாளம்,கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.

அண்மையில் மலையாள சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த இவர்.கவிஞர் வைரமுத்துவின் பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்றார்.மேலும் வைரமுத்து மற்றும் எ.ஆர்.ரஹ்மான் காம்போ ரொம்ப பிடிக்கும் எனக் கூறி சில பாடல் வரிகளைப் பாடி சுட்டிகாட்டினார்.

நடிகை சம்யுக்த பேசிய வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ள கவிஞர் வைரமுத்து, “மலையாளம் நனைந்த தமிழில் என் பாட்டு நீ சொல்லச் சொல்லப் பரவசமானேன் மகளே! தமிழும் மலையாளமும் உறவு மொழிகள் நாம் கலையால் ஒன்றுபடுவோம்; காலத்தை வென்றுவிடுவோம்” என பதிவிட்டுள்ளார்.

மீ-டூ சர்ச்சைக்கு பிறகு நடிகை சம்யுக்தா வைரமுத்துவை பற்றி பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.