வைரமுத்துவின் பேத்தி தமிழில் வாங்கிய மார்க் இதுவா?

தமிழ் சினிமாவின் பல்வேறு ஹிட் பாடல்களை எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து. இவரை தொடர்ந்து, இவரது மகன் மதன் கார்க்கியும், கபிலனும், தமிழ் சினிமாவில் பாடல்களை எழுதி வருகின்றனர்.

குறிப்பாக, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடலாசிரியர்களில் ஒருவராக மதன் கார்க்கி மாறிவிட்டார். இவ்வாறு இருக்க, தனது பேத்தி தமிழில் எவ்வளவு மதிப்பெண் பெற்றுள்ளார் என்பது குறித்து, வைரமுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தனது பேத்தி, தமிழில் 97.3 விழுக்காடு மதிப்பெண் பெற்றுள்ளதாகவும், இதற்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார். மேலும், என்னுடைய அடுத்த சந்ததியிலும், தமிழ் தொடர்வதாக பெருமிதத்துடன் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.