ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பிய டெம்போ வேன் தீ பற்றி எரிந்தது..!

சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த 9 பேர் டெம்போ டிராவல் வேனில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே வெங்கனூரில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த வாகனத்தின் எஞ்சின் பகுதியில் இருந்து புகை வர துவங்கியுள்ளது.

இதனை பார்த்த ஓட்டுநர் சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்பொழுது திடீரென வாகனத்தில் தீ பற்றி உள்ளது. இதனை அடுத்து வாகனத்தில் இருந்த ஓட்டுநர் உள்ளிட்ட 9 பேர் டெம்போ ட்ராவல் வேனில் இருந்து கீழே இறங்கி உள்ளனர்.

இதனை அடுத்து வாகனம் முழுவதும் தீ வேகமாக பரவியுள்ளது. இதில் டெம்போ ட்ராவல் வேன் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இந்த வாகனத்தில் பயணம் செய்த ஒன்பது பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News