பாலா இயக்கத்தில், அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வணங்கான். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தை, சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகை அன்று ரிலீஸ் ஆக இருப்பதாக, தகவல் பரவி வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, வரும் ஜனவரி 10-ம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இதே வாரத்தில், அஜித்தின் விடாமுயற்சி திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.