பாலா இயக்கத்தில், சூர்யா நடிப்பில், முதன்முதலில் உருவாகி வந்த திரைப்படம் தான் வணங்கான். ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, அப்படத்தில் இருந்து சூர்யா விலகினார்.
இதையடுத்து, இந்த படத்தில் நடிப்பதற்கு, நடிகர் அருண் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டார். படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துள்ளதால், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில், படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 8-ஆம் தேதி, மாலை 6 மணிக்கு, டிரைலர் ரிலீஸ் ஆக உள்ளது.