வணங்கான் படப்பிடிப்பு நடத்த காரணமாக மாறிய யோகிபாபு!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சரித்திர கால கதையில் திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பும்,சமீபத்தில் முடிவடைந்துள்ளது.

3-ஆம் கட்ட படப்பிடிப்பில், நடிகர் யோகிபாபு நடிக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால், அவர் ஜெயிலர் உள்ளிட்ட முக்கிய படங்களில் நடித்து வருவதால், கால்ஷீட் கிடைக்காத நிலை உள்ளது.

எனவே, சூர்யா 42 படத்தின் 3-ஆம் கட்ட படப்பிடிப்பு தொடங்க காலதாமதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தை பயன்படுத்தி, பாதியில் நிற்கும் வணங்கான் படத்தை முடிப்பதற்கு, பாலாவும், சூர்யாவும் முடிவு செய்துள்ளனராம்.