மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயதீர்வைத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் செந்தில் பாலாஜி. இவர் ஊழல் குற்றச்சாட்டில் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மூலம், கைது செய்யப்பட்டிருந்தார்.
அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது, சிகிச்சை பணிகள் அனைத்து முடிந்த நிலையில், சிறையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், பாஜக கட்சியின் எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன், இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருப்பதை பார்க்கும்போது, வேதனையளிக்கிறது. ஆனால், அவர் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறையில் தான் உள்ளார்.
அமைச்சராக இருப்பவரை கூட, தமிழக சிறைத்துறையால் சரியாக பார்த்துக் கொள்ள முடியவில்லையா?. அவருக்கு மருத்துவ உதவியை ஒழுங்காக வழங்க முடியவில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அப்படி உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், நீங்கள் மத்திய அரசின் கீழ் இயங்கும் எய்ம்ஸ் மருத்துவமனையிடம் இருந்து உதவியை பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.