இந்திய போக்குவரத்து சேவைகளில் முதுகெலும்பாக விளங்குவது ரயில் சேவை. இதனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் வேகத்தில் வந்தே பாரத் என்ற ரயில் சேவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மைசூர் சென்னை இடையேலான தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.முதல் நாளான இன்று பெங்களூர் – சென்னை இடையே உள்ள 43- ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனக் கூறப்படுகிறது.
வைஃபை, ஜிபிஎஸ், ஆட்டோமாடிக் கதவுகள் என பல்வேறு வசதிகள் உள்ள இந்த ரயில் சேவை , டெல்லியிலிருந்து 3-ரயில்களும், மும்பையிலிருந்து ஒரு ரயில் என ஏற்கனவே 4-ரயில்கள் தொடங்கபட்டது குறிப்பிடத்தக்கது.