சினிமா
”வாங்க விஜய்யண்ணா” அன்பாக வரவேற்ற சிம்பு..?
வாரிசு படத்தை தொடர்ந்து லியோ படத்தில் தளபதி விஜய் தீவிரமாக நடித்து வருகிறார். காஷ்மீர் படபிடிப்பை முடித்த படக்குழுவினர், அடுத்தக்கட்டமாக சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனிடையே ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் மட்டும் கணக்கு வைத்திருந்த விஜய், தற்போது இன்ஸ்டாகிராமிலும் கணக்கு துவங்கியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் துவங்கிய 99 நிமிடங்களில் 1 மில்லியன் பாலோயர்களை பெற்று, உலகளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். புதிய கணக்கு தொடங்கிய தளபதி விஜய்க்கு, நடிகர் சிம்பு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ,தளபதி விஜய்யண்ணா இன்ஸ்டாகிராம் உலகத்திற்கு வரவேற்கிரோம் என பதிவிட்டுள்ளார். சிம்புவின் இந்த பதிவு இருதரப்பு ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
You must be logged in to post a comment Login