சந்திரலேகா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். அதன்பிறகு, தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் நடித்து வந்த இவர், தற்போது சின்னத்திரையில் கலக்கி வருகிறார்.
இந்நிலையில், தனது ஃபாலோவர்கள் கேட்கும் கேள்விக்கு, நடிகை வனிதா பதில் அளித்து வந்தார். அப்போது, அடுத்த கல்யாணம் எப்போது என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் அளித்த அவர், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்றும், தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் அடிச்சு நியூஸ் கொடுக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். வனிதாவின் இந்த பதில், இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.