தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஹீரோயினாக நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை வனிதா விஜயகுமார்.
இவர் தற்போது Youtube Channel ஒன்றை ஆரம்பித்து, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், நடிகை வனிதா, பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், தனக்கு க்ளாஸ்ட்ரோபோபியா இருப்பதாக கூறியுள்ளார். அதாவது, இந்த நோய் இருப்பவர்கள், மூடப்பட்ட இடங்களில் இருப்பதற்கு பயப்படுவார்களாம்.
இதனால், லிப்ட், டாய்லட் ஆகியவற்றை பயன்படுத்தும்போது, அவர்கள் பயப்படுவார்களாம்.
இந்த தகவல், நெருக்கமானவர்களுக்கு மட்டும் தான், தற்போது வரை தெரியும் என்றும், அந்த பேட்டியில் வனிதா கூறியுள்ளார்.