சினிமா
“முட்டாள்கள்” – வனிதாவின் அதிரடி பதிவு வைரல்!
நயன்தாராவிற்கும், விக்னேஷ் சிவனிற்கும், கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமாகிய நான்கே மாதங்களில், இந்த தம்பதியினருக்கு இரட்டை குழந்தை பிறந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான விவாதங்களும், கருத்துகளும் தான் இணையம் முழுக்க நிரம்பி வழிகிறது.
இந்நிலையில், இதுகுறித்து நடிகை வனிதா விஜயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “ஒரு தம்பதி பெற்றோர் ஆவதைவிட சந்தோஷமான விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது. இரண்டு அழகான குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ள விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுக்கு வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும், லீகல் தெரியும், மெடிக்கல் தெரியும் என்று சில முட்டாள்கள் உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்குவார்கள். ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவரது பதிவிற்கு, நெட்டிசன்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
