சேலையில் கிளாமராக போஸ் கொடுத்த வனிதாவின் மகள் ஜோவிகா

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதாவுக்கு ஜோவிகா, ஜெயனிகா என இரு மகள்கள் உள்ளனர். வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா, படிப்பில் ஆர்வம் இல்லாததால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். இதையடுத்து சினிமாவில் ஹீரோயின் ஆவதற்காக மும்பையில் உள்ள ஆக்டிங் ஸ்கூலில் சேர்ந்து படித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகா கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்களில் ஜோவிகாவும் ஒருவர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜோவிகாவுக்கு ஹீரோயினாக நடிக்கவும் வாய்ப்புகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜோவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமராக போஸ் கொடுத்தபடி போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News