சிம்புவும் இல்ல.. விஷாலும் இல்ல.. இவரு தான் மாப்பிள்ளை..!

நடிகர் சரத்குமாரின் மகளும், தென்னிந்திய நடிகையுமானவர் வரலஷ்மி சரத்குமார். இவர், நடிகர் சிம்புவை காதலிப்பதாகவும், திருமணம் நடக்க இருப்பதாகவும், தகவல் பரவியது.

இதேபோல், நடிகர் விஷாலுடனும், நடிகை வரலஷ்மி சரத்குமார் கிசுகிசுக்கப்பட்டார். அதன்பிறகு தான், அந்த தகவல் அனைத்தும் வதந்தி என்பது தெரியவந்தது.

இவ்வாறு இருக்க, வரலஷ்மி சரத்குமார் திருமணம் செய்ய உள்ள நபர் குறித்து, உண்மைக்கு நெருக்கமான தகவல் கசிந்துள்ளது.

அதாவது, மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் என்பவரை தான், வரலஷ்மி திருமணம் செய்துக் கொள்ள உள்ளாராம். தற்போது, இவர்கள் இரண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாம்.

RELATED ARTICLES

Recent News