லவ் டுடே நாயகனுடன் நடிக்க மறுத்த வாரிசு நடிகை..! இதான் விஷயமா..?

இயக்குனராக இருந்து பின்னர், லவ் டுடே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, பல்வேறு இயக்குனர்கள் பிரதீப்பை வைத்து படமெடுக்க பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். அந்த வகையில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதனிடையே சிம்பு நடிப்பில் கொரானா குமார் என்ற திரைப்படம் உருவாக இருந்தது.\

முன்னதாக இவருக்கு ஜோடியாக நடிக்க அதிதி சங்கர் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் நடிகர் சிம்பு விலகிய நிலையில், அவருக்கு பதிலாக ப்ரதீப் ரங்கநாதன் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். இதனிடையே சிம்புக்கு ஜோடியாக நடிக்க தயாராக இருந்த அதிதி சங்கர், ப்ரதீப்புடன் நடிக்க தயங்குவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.